அறிக்கைகள் தொடர்பிலான பரிந்துரைகளை பெற்றுக்கொள்வது குறித்து கோப் குழு கவனம்

அறிக்கைகள் தொடர்பிலான பரிந்துரைகளை பெற்றுக்கொள்வது குறித்து கோப் குழு கவனம்

அறிக்கைகள் தொடர்பிலான பரிந்துரைகளை பெற்றுக்கொள்வது குறித்து கோப் குழு கவனம்

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2016 | 9:32 am

அரசாங்க நிறுவனங்கள் தொடர்பில் தம்மால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பிலான பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்து கோப் குழு கவனம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் குறித்து சபாநாயகருடனும் கலந்துரையாடியுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டார்.

15 அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான விபரங்களை வெளியிடுவதற்கு தாம் எதிர்ப்பார்ப்பதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விபரங்களை பாராளுமன்றத்தின் ஊடாக மொழி பெயர்ப்புத் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் வாரத்திற்குள் அந்த அறிக்கைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எண்ணியுள்ளதாக அவர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

அதன் மூலம் நாட்டிலுள்ள மேலும் சில அரச நிறுவனங்களின் முயற்சியாண்மைகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்