அரசியல் வாழ்வில் பல நெருக்கடிகளை சந்தித்த போதும் மக்கள் சேவையில் தொடர்ந்தும் ஈடுபட்ட தலைவி ஜெயலலிதா

அரசியல் வாழ்வில் பல நெருக்கடிகளை சந்தித்த போதும் மக்கள் சேவையில் தொடர்ந்தும் ஈடுபட்ட தலைவி ஜெயலலிதா

அரசியல் வாழ்வில் பல நெருக்கடிகளை சந்தித்த போதும் மக்கள் சேவையில் தொடர்ந்தும் ஈடுபட்ட தலைவி ஜெயலலிதா

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2016 | 1:15 pm

இதேவேளை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் வாழ்வில் பல நெருக்கடிகளையும், சோதனைகளையும் சந்தித்தபோதும், அவற்றையொல்லாம் எதிர்கொண்டு மக்கள் சேவையில் தொடர்ந்தும் ஈடுபட்டு மக்கள் மனதில் அழியா இடம்பிடித்த ஒரு தலைவியாக ஜெயலலிதா மிளிர்ந்தார் என எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

காலத்துக்குக் காலம் இலங்கை வாழ் தமிழர்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்துவந்த அவர், இந்த நாட்டு தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதுடன், இந்திய மத்திய அரசுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார் என எதிர்கட்சித் தலைவரின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை தமிழ் அகதிகளை அரவணைத்து அவர்களுக்கு தமது அரசின் மூலம் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்கி வாழவைத்தமையை நன்றியுடன் நினைவுகூருவதாக எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக எதிர்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழக மக்களுக்கும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும், தமிழ்நாடு அரசுக்கும், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பிலும் இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் என்ற வகையிலும் ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக இரா. சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்