மத்திய வியட்னாமில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 13 பேர் உயிரிழப்பு

மத்திய வியட்னாமில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 13 பேர் உயிரிழப்பு

மத்திய வியட்னாமில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 13 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2016 | 3:59 pm

மத்திய வியட்னாமில் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய வியட்னாமில் கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கடும் மழையின் காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களிலும் வியட்னாமில் அடை மழை நீடிக்குமெனவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய வியட்னாமில் சுமார் 10,000 குடியிருப்புக்கள் நீரில் மூழ்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குவாங் நாம் மாகாணத்தில் 4 தொடக்கம் 13 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் வௌ்ளத்தில் அல்லுண்டு செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்