பூநகரி பகுதியில் தீயில் கருகிய நிலையில் மனித எச்சங்கள் மீட்பு

பூநகரி பகுதியில் தீயில் கருகிய நிலையில் மனித எச்சங்கள் மீட்பு

பூநகரி பகுதியில் தீயில் கருகிய நிலையில் மனித எச்சங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2016 | 3:44 pm

கிளிநொச்சி பூநகரி – வாடியடி பகுதியில் தீயில் கருகிய நிலையில் மனித எலும்புக்கூடும், எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.

பூநகரி பொலிஸாரால் இன்று முற்பகல் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர அலுவலகம் தெரிவித்துள்ளது.

பூநகரி பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும்ஒருவரை தேடும் நடவடிக்கையின் போதே எலும்புக்கூடும் எச்சங்களும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

தனது கணவர் காணாமற்போயுள்ளதாக பெண்ணொருவரால் பூநகரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இன்று முற்பகல் கண்டுப்பிடிக்கப்பட்ட எலும்புக் கூடு காணாமற்போனவருடையதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நீதவான் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூநகரி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
con[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்