தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்ட நாட்களில் இ.போ.சபைக்கு 120 மில்லியன் வருமானம்

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2016 | 2:49 pm

தனியார் பஸ் ஊழிகளின் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்ட நாட்களில் இலங்கை போக்குவரத்து சபைக்கு 120 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

குறித்த நாட்களில் 6,700 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

120 மில்லியன் ரூபா வருமானமானது சாதாரனமாக வார நாட்களில் கிடைக்கும் வருமானத்தை விட 66 வீத அதிகரிப்பை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனூடாக இலங்கை போக்குவரத்து சபைக்கு மேலும் 1250 பஸ்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரமல் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்