பஸ்கள் மீதான தாக்குதலில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதி

பஸ்கள் மீதான தாக்குதலில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதி

பஸ்கள் மீதான தாக்குதலில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2016 | 3:13 pm

இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் காயமடைந்த 23 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறுகின்றனர்.

தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்த போது சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மீது நாட்டின் பல பகுதிகளிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது காயமடைந்த 23 பஸ் ஊழியர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் ஊழியர்களின் மருத்துவ செலவை இலங்கை போக்குவரத்து சபை ஏற்றுக் கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தாக்குதலின் போது காயமடைந்த ஏனைய ஊழியர்களின் மருத்துவ செலவையும் ஏற்றுக் கொள்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்