பஸ்கள் மீதான தாக்குதலில் படுகாயமடைந்தவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 

பஸ்கள் மீதான தாக்குதலில் படுகாயமடைந்தவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2016 | 10:03 pm

தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்புக்கு மத்தியில் போக்குவரத்தில் ஈடுபட்ட பஸ்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் அநுராதபுரத்தில் பிரயாணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நேற்றிரவு 9.30 மணியளவில் மதவாச்சி, இங்கிரிகொல்லாவ பகுதியில் கல்வீச்சு தாக்குதலுக்குள்ளானது.

இதன்போது குறித்த பஸ்ஸில் இருந்த பயணி ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டதால், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைநகர் இராணுவ முகாமில் சேவையாற்றிவரும் இராணுவ உறுப்பினரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

இவர் விடுமுறைக்காக நாவலப்பிட்டியவிலுள்ள தனது வீட்டிற்குப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்