வாள்வெட்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகம்: ஐவர் கைது

வாள்வெட்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகம்: ஐவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2016 | 3:41 pm

யாழ். குடாநாட்டில் இடம்பெறுகின்ற வாள்வெட்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று காலை 10 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உரும்பிராய், யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் கோண்டாவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 2 வாள்களும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கையடக்கத்தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ். பொலிஸ் பிராந்தியத்திற்குள் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்களை யாழ். நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடுக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்