முறிகள் விநியோகம் தொடர்பில் தகவல்களை வெளிக்கொணரத் தயார் – சுசில் பிரேமஜயந்த

முறிகள் விநியோகம் தொடர்பில் தகவல்களை வெளிக்கொணரத் தயார் – சுசில் பிரேமஜயந்த

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2016 | 8:57 pm

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் அண்மைக்காலமாக மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், இது தொடர்பிலான விசாரணை மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முறிகள் விநியோகத்தின் ஊடாக இலாபம் ஈட்டிய நபர்கள் தற்போது மீண்டும் வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளதாகவும் சில ஊடக நிறுவனங்களைக் கொள்வனவு செய்ய முயல்வதாகவும் கோப் குழு தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.
இதேவேளை, முறிகள் விநியோகம் தொடர்பில் தகவல்களை வெளிக்கொணர்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்