பொது போக்குவரத்து சேவையில் எழுந்துள்ள பிரச்சினையை ஆராய குழு நியமிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

பொது போக்குவரத்து சேவையில் எழுந்துள்ள பிரச்சினையை ஆராய குழு நியமிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2016 | 8:11 pm

தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நாட்டு மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், பொது போக்குவரத்து சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு வழங்குவதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இதனை அடுத்து தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பும் முடிவுக்கு வந்தது.

பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாகக் கைவிட்டு பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

எந்த ஒரு தரப்பினருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில், குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக குழு ஒன்றினை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபரினால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகள், வாகனப் போக்குவரத்து ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்

இந்த குழு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் செயற்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்