நுகர்வோர் சட்டத்தை மீறிய 1423 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்

நுகர்வோர் சட்டத்தை மீறிய 1423 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்

நுகர்வோர் சட்டத்தை மீறிய 1423 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2016 | 3:20 pm

கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் நுகர்வோர் சட்டத்தை மீறிய 1423 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட 2108 சுற்றிவளைப்புகளின் போது குறித்த வர்த்தகர்கள் அடையாளங்காணப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்தது.

இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், நிர்ணய விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நுகர்வோர் உரிமைகளை மீறி செயற்படும் வர்த்தகர்கள் தொடர்பில் 011 7 55 481 என்ற இலக்கத்திற்கோ அல்லது 011 7 55 482 அல்லது 011 7 55 483 ஆகிய இலக்கங்களுக்கோ அழைப்பு மேற்கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்