தெனியாய பெவர்லி தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தெனியாய பெவர்லி தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தெனியாய பெவர்லி தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2016 | 3:26 pm

தோட்ட முகாமைத்துவ அலுவலகம் வேறொரு இடத்திற்கு மாற்றப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தெனியாய பெவர்லி தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

பெவர்லி தோட்டத்திற்கு சொந்தமான மூன்று பிரிவுகளை முகாமைத்துவம் செய்யும் அலுவலகத்தை 9 கிலோமீற்றர் தொலைவிலுள்ள என்சல்வத்தைக்கு மாற்றுவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அலுவலக உபகரணங்கள் மற்றும் கோப்புகளும் புதிய அலுவலகத்திற்கு நேற்று மாற்றப்பட்டதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், புதிய அலுவலகத்திற்கு தங்களின் தேவைகளை நிவர்த்திக்க சென்றபோது அங்கு உத்தியோகஸ்தர்கள் யாரும் இருக்கவில்லை என தொழிலாளர்கள் குற்றச்சாட்டினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்