உசைன் போல்ட்டுக்கு ஆண்டின் சிறந்த மெய்வல்லுனருக்கான விருது

உசைன் போல்ட்டுக்கு ஆண்டின் சிறந்த மெய்வல்லுனருக்கான விருது

உசைன் போல்ட்டுக்கு ஆண்டின் சிறந்த மெய்வல்லுனருக்கான விருது

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2016 | 9:45 pm

உலகின் அதிவேக மனிதரான ஜமைக்காவின் உசைன் போல்ட்டுக்கு ஆண்டின் சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டின் சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனைக்கான விருதிற்கு எத்தியோப்பியாவின் அல்மாஸ் அயானா பாத்திரமானார்.

இவ்வருடம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் விழாவில் ஆற்றல்களை சிறப்பாக வெளிப்படுத்தியதன் மூலம் போல்ட்டுக்கும் அயானாவுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

உசைன் போல்ட் மாத்திரமே தொடர்ச்சியாக மூன்று தடவைகள் ஒலிம்பிக் விழாக்களில் தங்கப்பதக்கங்களை சுவீகரித்த வீரராகத் திகழ்கிறார்.

2008 ஆம் ஆண்டு, 2012 ஆம் ஆண்டு மற்றும் இவ்வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் விழாவில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4 X 100 அஞ்சலோட்டப் போட்டிகளில் மூன்று முறை தங்கப்பதக்கங்களை சுவீகரித்திருந்தார்.

23 ஆண்டுகளுக்கு பிறகு 10,000 மீட்டர் தொலைதூர ஓட்டத்தில் சீனாவின் வன் ஜூங்கியாவின் சாதனையைத் தகர்த்து புதிய சாதனையை நிலைநாட்டியமைக்காக அல்மாஸ் அயானாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்