அமெரிக்காவை மீட்டெடுத்த ஒபாமா: வளப்படுத்துவாரா ட்ரம்ப்?

அமெரிக்காவை மீட்டெடுத்த ஒபாமா: வளப்படுத்துவாரா ட்ரம்ப்?

அமெரிக்காவை மீட்டெடுத்த ஒபாமா: வளப்படுத்துவாரா ட்ரம்ப்?

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2016 | 4:43 pm

அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில், அமெரிக்கப் பொருளாதாரம் வலுவான இடத்தில் இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்குறியீடு 3.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து, வரலாறு காணாத அளவுக்கு 4.6 சதவீதமாக உள்ளது.

2007 ஆம் ஆண்டிற்கு பிறகு முதன் முறையாக இந்த அளவிற்குக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மாதத்தில் மாத்திரம் 1,78,000 புதிய வேலைகளுக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மருத்துவம், கட்டுமானம், அரசு, வணிகம் மற்றும் சேவைத் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

அதிபர் புஷ் ஆட்சிக்காலத்தின் இறுதியில் அமெரிக்காவில் கடுமையான பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது.

இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் பறிபோயின. உற்பத்தித்துறை நிறுவனங்கள் மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, தொழிற்சாலைகளை மாற்றின. வீட்டுக் கடன் பிரச்சினைகளால் வங்கிகள் திவாலாகிக் கொண்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக கார் உற்பத்தி நிறுவனங்களும் கடும் பின்னடைவைச் சந்தித்தன.

வங்கிகளுக்கும் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் ஒபாமா அரசு உதவிக்கரம் நீட்டியதால், இரு துறைகளும் விரைவில் மீண்டு வந்தன.
மேலும் பல நடவடிக்கைகளால் பொருளாதாரத் தேக்கத்திலிருந்து மீட்டு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்தார் ஒபாமா.

அதன் விளைவாக தற்போது வலுவான நிலையில் அமெரிக்க பொருளாதாரம் உள்ளதாக வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடுமையான நடவடிக்கைகள் மூலம் உற்பத்தி நிறுவனங்கள் அயல் நாடுகளுக்கு இடம்பெயராமல் தடுப்பேன் என்று சூளுரைத்து ஆட்சியைப் பிடித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

ஒபாமா விட்டுச்செல்லும் வலுவான பொருளாதார நிலையை மேலும் வளப்படுத்துவாரா ட்ரம்ப் அல்லது அவரின் கொள்கைகள் எதிர்மறையாக அமையுமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்