நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு: ஏழாவது நாளாக இன்றும் சாட்சிப்பதிவு

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு: ஏழாவது நாளாக இன்றும் சாட்சிப்பதிவு

எழுத்தாளர் Bella Dalima

01 Dec, 2016 | 8:59 pm

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் முறைப்பாட்டாளர்கள் தரப்பு முதல் சாட்சியாளரான, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரியிடம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஏழாவது நாளாக இன்றும் சாட்சிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசேட ஜூரிகள் சபை முன்னிலையில் சாட்சிப் பதிவு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சாட்சியாளர் ஏற்கனவே வழங்கியிருந்த சாட்சியங்களுக்கும் தற்போது வழங்கியுள்ள சாட்சியங்களுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்படுவதாக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.

பிரித்திவிராஜ் மனம்பேரியிடம் முன்னெடுக்கப்பட்ட குறுக்குக் கேள்விகள் நேற்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், சட்ட மா அதிபரின் விசாரணை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பிலான மேலதிக சாட்சிப் பதிவு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பு முதல் சாட்சியாளரான ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரியை விசேட பாதுகாப்புடன் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்