ரயில் சேவை தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

ரயில் சேவை தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

01 Dec, 2016 | 7:16 pm

இன்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகவிருந்த ரயில் சேவை தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

எனினும், தனியார் பஸ், முச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் என்பன இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.

சில தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடினர்.

எனினும், மாகாண தனியார் சேவை சங்கம் உள்ளிட்ட 30 தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகவுள்ளன.

இந்த தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை.

வீதி விதிகளை மீறுவோருக்கான அபராதத் தொகையை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்