‘நாடா’ புயல் நாளை சென்னையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவிப்பு

‘நாடா’ புயல் நாளை சென்னையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவிப்பு

‘நாடா’ புயல் நாளை சென்னையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2016 | 1:25 pm

வங்கக் கடலில் உருவாகியுள்ள நாடா புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் மழை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள நாடா புயல் சென்னையிலிருந்து 350 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 20 கிலோ மீற்றர் வேகத்தில் நாடா புயல் நகர்ந்து வருவதாகவும் நாளை அதிகாலை வேதாரண்யத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையில் கடலூர் அருகே கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது இதனால் கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் இந்திய வானிலை மையம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

கடந்த 29 ஆம் திகதி வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அது வலுவடைந்துள்ளது.

நாடா எனும் பெயரை அரேபிய நாடு வழங்கியுள்ளதுடன் இது ஒரு அ|ரேபிய பெயராகும்.

இதேவேளை கடலூர் , நாகை , புதுவை ஆகிய மாவட்டங்களுக்கு நாடா புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் துறைமுகம், பாம்பன் துறைமுகம், சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் ஆகிய இடங்களில் இரண்டாம் எண் சூறாவளி எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளதாக தமிழகத்திலுள்ள எமது செய்தியாளர்கள் கூறினர்.

நாடா புயல் காரணமாக சென்னை, நாகை, காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

இதனைத் தவிர விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் வானூர் தாலுகாவிலுள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி காரைக்காலில் உள்ள பாடசாலைகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்