கருணாநிதி வைத்தியசாலையில் அனுமதி

கருணாநிதி வைத்தியசாலையில் அனுமதி

கருணாநிதி வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2016 | 1:29 pm

திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைப்பாடு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை கடுமையான வைரஸ் காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வீடு திரும்பியுள்ளார்.

கடந்த 28 ஆம் திகதி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்திக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

இன்று காலை சோனியாகாந்தி வைத்தியசாலையில் இருந்து திரும்பியுள்ளதாக அந்த நாட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்