ஒரே நிமிடத்தில் 20 ஆடைகளை மாற்றி மலேசிய பெண் கின்னஸ் சாதனை (Video)

ஒரே நிமிடத்தில் 20 ஆடைகளை மாற்றி மலேசிய பெண் கின்னஸ் சாதனை (Video)

எழுத்தாளர் Bella Dalima

01 Dec, 2016 | 5:00 pm

ஒரே நிமிடத்தில் 20 ஆடைகளை மாற்றி மலேசிய பெண் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

மின் செக் லூ என்ற மலேசிய பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு நிமிடத்தில் 16 உடைகளைப் பார்வையாளர்கள் முன்னிலையில் மாற்றி கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த சாதனையை சில்வியா லிம் என்ற மற்றொரு மலேசிய பெண் 1 நிமிடத்தில் 18 ஆடைகளை மாற்றி மின் செக் லூவின் சாதனையை முறியடித்தார்.

விடா முயற்சியுடன் மீண்டும் சாதனை நிகழ்த்த எண்ணிய மின் செக் லூ, தற்போது 1 நிமிடத்தில் 20 ஆடைகளை மாற்றி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

இதன் மூலம் மின்னின் பெயர் மீண்டும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்