ஏதென்ஸில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் நடுவரைத் தாக்கி வீழ்த்திய போட்டியாளர் (Video)

ஏதென்ஸில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் நடுவரைத் தாக்கி வீழ்த்திய போட்டியாளர் (Video)

எழுத்தாளர் Bella Dalima

01 Dec, 2016 | 3:53 pm

கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான ஆணழகன் போட்டியில், போட்டியாளர் ஒருவர் நடுவரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

வைரக் கிண்ணத்திற்கான போட்டியின் போது, நடுவரின் தீர்ப்பிற்கு எதிராக போட்டியாளர் ஒருவர் கடுமையாக நடந்துகொண்டார்.

கிரேக்கத்தின் பிரபல கட்டழகன் கியான்னிஸ் மேகோஸ், இந்தப் போட்டியில் 100 கிலோ பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்புடன் இருந்துள்ளார்.

ஆனால், நடுவர்களின் கணிப்பு வேறுமாதிரி அமைந்துள்ளது.

இந்த ஆண்டின் சாம்பியனாக நடுவர் வேறொரு நபரைத் தெரிவு செய்து அறிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கியான்னிஸ், நடுவர்களைத் தாக்கத் தொடங்கினார்.

அர்மாண்டோ மார்க்வெஸ் என்ற நடுவரை கியான்னிஸ் தாக்கி வீழ்த்திய சம்பவம் அங்கிருந்த பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், கட்டழகர்களுக்கான பிரத்தியேக இணையத்தளம் ஒன்று கியான்னிஸிடம் இருந்து பெருந்தொகையை அபராதமாக வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதுபோன்ற செயல்களை எந்த விளையாட்டிலும் வீரர்கள் எவரும் செய்வதை நிர்வாகம் அனுமதிக்கக்கூடாது எனவும் அந்த இணையத்தளம் கடுமையாக விமர்சித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்