இது பெண்கள் கார் ஓட்டும் காலம்: தடையை நீக்கக் கோரும் சவுதி இளவரசர்

இது பெண்கள் கார் ஓட்டும் காலம்: தடையை நீக்கக் கோரும் சவுதி இளவரசர்

இது பெண்கள் கார் ஓட்டும் காலம்: தடையை நீக்கக் கோரும் சவுதி இளவரசர்

எழுத்தாளர் Bella Dalima

01 Dec, 2016 | 4:33 pm

சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் அவசர தீர்வொன்றை மேற்கொள்ள வேண்டும் என சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலால் கூறியுள்ளார்.

சவுதியில் பெண்களுக்கு எதிரான பலவிதமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அதில் முக்கியமானது, வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையாகும்.

இதற்கு எதிராக, பல்வேறு அமைப்புக்கள் தொடர்ந்து குரல் கொடுத்தும், போராட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றன.

இந்நிலையில், சவுதி அரச பரம்பரையில் பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் இளவரசர் அல்வாலீத் பின் தலால், இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் வலைப்பக்கத்தில் இதுகுறித்து நேற்று பதிவிட்ட இளவரசர் அல்வாலீத், ”விவாதத்தை நிறுத்துங்கள். இது, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான நேரம்” எனக்கூறி போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அல்வாலீத்தின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,

[quote]பெண்களை கார் ஓட்டக்கூடாது என்பது, அவர்களுக்கு கல்வி அல்லது சுதந்திரத்தை அளிக்க மறுப்பது போன்றது. வாகனம் ஓட்டுவதும் ஒரு அடிப்படை உரிமைதான். பெண்கள் கார் ஓட்ட தடை செய்வது, அவர்களுக்கான செலவீனங்களை அதிகரிக்கச் செய்கிறது. வெளி நபர்களை ஓட்டுநர் பணிக்கு அமர்த்தி அவர்களுக்குத் தனியாக சம்பளம் தர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கணவன்மார்கள், தங்களின் மனைவிக்காக கார் ஓட்ட வேண்டுமானால், அவர்கள் அலுவலக வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு வர வேண்டும். இதனால், மனித உழைப்பு பாதிக்கப்பட்டு, நாட்டின் உள்நாட்டு உற்பத்தியும் பலவீனமாகும். தற்போதைய பொருளாதார சூழலில், பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிப்பது சரியல்ல. இதற்கு அவசரமாக ஒரு முடிவுகட்ட வேண்டும்[/quote]

என கூறப்பட்டுள்ளது.

சவுதி அரச பரம்பரையில் வழக்கத்திற்கு மாறான சிந்தனைப்போக்கு கொண்டவராகக் கருதப்படுபவர் அல்வாலீத். பொதுவாகவே மக்கள் மீதான அபிமான உணர்வுள்ளவரான இவர், பெண்ணியவாதியாகவும் அறியப்படுகிறார்.

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அரசியல் பதவி எதையும் அவர் வகிக்கவில்லை. எனினும், சிட்டி குரூப், டிஸ்னி உட்பட உலகின் பெரிய நிறுவனங்கள் அனைத்திலும் பங்கைக் கொண்டுள்ள வணிக சாம்ராஜ்யமான Kingdom Holding கம்பெனியின் தலைவராக அல்வாலீத் உள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்