அவன்ற் கார்ட் வழக்கு: கோட்டாபய உள்ளிட்ட எழுவர் வெளிநாடு செல்ல நிபந்தனையுடனான அனுமதி

அவன்ற் கார்ட் வழக்கு: கோட்டாபய உள்ளிட்ட எழுவர் வெளிநாடு செல்ல நிபந்தனையுடனான அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

01 Dec, 2016 | 7:00 pm

அவன்ற் கார்ட் வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேர் வெளிநாடு செல்வதற்கு நிபந்தனையுடனான அனுமதியை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.

இதற்கமைய, இவர்கள் வெளிநாடு செல்வதாக இருந்தால் ஒரு வாரத்திற்கு முன்னதாக சட்ட மா அதிபர் மற்றும் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அவன்ற் கார்ட் சம்பவம் தொடர்பிலான வழக்கில் ஏழு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தபோதே கொழும்பு மேலதிக நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.

வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதிகள் அனைவருக்கும் வெளிநாடு செல்லவேண்டிய தேவை உள்ளதாக அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு ஏற்ப, இந்த விடயத்தில் தீர்மானம் மேற்கொள்ள முடியும் என இதன்போது அரசதரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார்.

அவன்ற் கார்ட் நிறுவனம் சட்டவிரோதமாக மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையொன்றை நடத்திச்செல்வதற்கு சந்தர்ப்பமளித்து அதற்கு உடந்தையாக செயற்பட்டதால் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்