வசீம் தாஜுதீன் கொலை: அனுர சேனாநாயக்க, சுமித் பெரேராவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

வசீம் தாஜுதீன் கொலை: அனுர சேனாநாயக்க, சுமித் பெரேராவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2016 | 7:12 pm

ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் கைதாகியுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுமித் பெரேரா ஆகியோர் அடுத்த மாதம் 14 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாஜூதீனின் கொலை தொடர்பிலான விசாரணைகளின்போது, கொலை சம்பவம் இடம்பெற்றவேளை அலரி மாளிகையில் இருந்த எவரிடம் வேண்டுமென்றாலும் தயக்கமின்றி கேள்விகளைத் தொடுக்குமாறு நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு அறிவித்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் இடம்பெற்ற தினத்தில் அலரி மாளிகையில் இருந்த சிலர் வெளிநபர்களுடன் தொலைபேசியில் உரையாடியமை இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரத்துபஸ்வல பகுதியில் சுத்தமான நீரை வழங்குமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் சம்பவ இடத்திற்கு இராணுவம் வரவழைக்கப்பட்டமை குறித்து அனுர சேனாநாயக்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மேலதிக நீதவான் இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்