பேஸ்புக் மெஸெஞ்சரில் Instant Games அறிமுகம்

பேஸ்புக் மெஸெஞ்சரில் Instant Games அறிமுகம்

பேஸ்புக் மெஸெஞ்சரில் Instant Games அறிமுகம்

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2016 | 4:11 pm

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் வழங்கும் தகவல் பரிமாற்ற சேவையான மெஸெஞ்சரில் 17 வகையான புதிய விளையாட்டுக்கள் (Instant Games) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விளையாட்டுக்கள் அனைத்தையும் புகழ்பெற்ற பழைய நிறுவனங்கள் மற்றும் இந்த துறைக்கு புதியவர்கள் எனக் கருதப்படும் வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதற்காக புதிய ஐகான் ஒன்று பேஸ்புக் மெஸெஞ்சரின் புகைப்படங்கள் மற்றும் ஸ்டிக்கர் கமெண்ட்டுகள் அருகிலேயே அமைந்துள்ளது.

இந்த விளையாட்டுகள் அனைத்தும் புதிய ஹெச்.டி.எம்.எல் 5 மொபைல் வெப் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனால் எந்த ஒரு திரையிலும் தொட்டவுடன் விரைவில் தோன்றுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி, பேஸ்புக்கில் நேரம் செலவிடுபவர்களில் 15 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் விளையாட்டுக்களில் அதிக நேரம் செலவிடுவதாகத் தெரிய வந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்