பேரணியை கலைக்க முயன்ற சந்தர்ப்பத்தில் 6 மாணவர்களுக்கு காயம் – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

பேரணியை கலைக்க முயன்ற சந்தர்ப்பத்தில் 6 மாணவர்களுக்கு காயம் – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

பேரணியை கலைக்க முயன்ற சந்தர்ப்பத்தில் 6 மாணவர்களுக்கு காயம் – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2016 | 7:55 am

பத்தரமுல்ல பொல்தூவ பாலமருகே தங்களின் பேரணியை கலைக்க பொலிஸார் முயன்ற சந்தர்ப்பத்தில் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வரவு செலவு திட்டம் மற்றும் சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே நேற்று இந்த பேரணியை ஏற்பாடு செய்ததாக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் 3 பேர் தேசிய வைத்தியசாலையிலும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

காயமடைந்தவர்களில் இருவருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளமையினால் அவர்கள் சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பொல்துவ பாலத்திற்கு அருகில் வீதி தடைகளை தாண்டி மாணவர்கள் பேரணியை முன்னெடுத்ததால் அவர்களை கலைப்பதற்கு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொள்ள நேரிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்