பிரேசில் வீரர்களின் துக்கத்தில் பங்கேற்றுள்ள கால்பந்து உலகம்

பிரேசில் வீரர்களின் துக்கத்தில் பங்கேற்றுள்ள கால்பந்து உலகம்

பிரேசில் வீரர்களின் துக்கத்தில் பங்கேற்றுள்ள கால்பந்து உலகம்

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2016 | 4:56 pm

கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் தமது அணி வீரர்கள் பெரும்பாலானோரை இழந்துள்ள பிரேசிலின் சப்பகோயென்ஸ் கால்பந்து அணியினரின் துக்கத்தில் கால்பந்து உலகம் பங்கேற்றுள்ளது.

சப்பகோ நகரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சப்பகோயென்ஸ் கால்பந்து அணியின் ஆதரவாளர்கள், அந்நகரின் மத்தியில் இருந்து சப்பகோயென்ஸ் அணியின் கால்பந்து மைதானத்திற்கு சென்று வேண்டுதல் நடத்தியும் பாடல்கள் பாடியும் பாராட்டுத் தெரிவித்தும் தங்களின் ஆதரவை அந்த அணிக்கு தெரிவித்தனர்.

சப்பகோயென்ஸ் கால்பந்து அணியினர் பயணம் செய்த விமானத்தில் இருந்த 77 பேரில் 6 பேர் மட்டுமே விபத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளனர்.

தங்களின் கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய போட்டி என்று கூறப்பட்ட கோபா சூடமெரிக்கானா தொடரின் இறுதியாட்டத்தில் விளையாட அவர்கள் கொலம்பியாவிற்கு விமானத்தில் சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்