பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2016 | 8:26 am

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலக கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய மாதாந்தம் இந்தக் கொடுப்பனவு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கவுள்ளது.

கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது தொகுதியில் அலுவலகம் ஒன்றை திறக்க வேண்டியது கட்டாயமாகும்.

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அலுவலகங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன், இந்த பணம் உரிய முறையில் செலவிடப்படுகிறதா என்பதை மேற்பார்வை செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை அலுவலகங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்