துருக்கியில் பாடசாலை விடுதியில் தீ விபத்து: 11 மாணவிகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

துருக்கியில் பாடசாலை விடுதியில் தீ விபத்து: 11 மாணவிகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

துருக்கியில் பாடசாலை விடுதியில் தீ விபத்து: 11 மாணவிகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2016 | 3:57 pm

துருக்கியில் உள்ள பாடசாலை விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 மாணவிகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் துருக்கி மாகாணத்தின் அதானாவில் இருக்கும் பாடசாலை விடுதி ஒன்றில் நேற்று காலை தீ பரவியுள்ளது.

இதில் விடுதியில் இருந்த மாணவிகளில் 11 பேர் மற்றும் விடுதி காப்பாளராகப் பணிபுரிந்த பெண் உட்பட 12 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை மாணவிகள் 34 பேர் தங்கியிருந்துள்ளனர்.

தீ விபத்தில் குறைந்தது 22 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் மின் கோளாறினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுதியில் இருந்து இதுவரை 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்