திருக்கோவில் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

திருக்கோவில் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

திருக்கோவில் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2016 | 9:27 am

அம்பாறை திருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கரவண்டியில் நேற்று மாலை வயல் காவலுக்கு சென்றுகொண்டிருந்தவரே யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

சடலம் திருக்கோவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில் இரண்டாம் வீதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 53 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்