தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தாக்குதல்: மேலும் இரண்டு சாட்சியங்கள் பதிவு

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தாக்குதல்: மேலும் இரண்டு சாட்சியங்கள் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2016 | 8:15 pm

யாழ். தீவகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக மேலும் இரண்டு சாட்சியங்கள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் மேற்கொண்ட தாக்குதலை நேரில் கண்ட இருவர் இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேர்தல் பரப்புரைக்காக வாடகைக்கு அமர்த்திச்சென்ற கார்கள் இரண்டினுடைய சாரதிகளிடமே இவ்வாறு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலின்போது தங்களது கார்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டதாகவும், தங்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உ.மயூரன் சம்பவம் தொடர்பான சட்ட வைத்திய அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தீவகத்திற்கு தேர்தல் பரப்புரைக்காகச் சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் நாரந்தனை பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருந்ததோடு, 20 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்