அரசாங்கத்திற்கும் ராஜபக்ஸ குடும்பத்திற்கும் உள்ள கொடுக்கல் வாங்கல் என்ன: அசாத் சாலி கேள்வி

அரசாங்கத்திற்கும் ராஜபக்ஸ குடும்பத்திற்கும் உள்ள கொடுக்கல் வாங்கல் என்ன: அசாத் சாலி கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2016 | 6:29 pm

நாட்டில் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பணிப்பகிஷ்கரிப்புகளின் பின்புலம் குறித்து தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி விளக்கமளித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

[quote]தற்போது அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மக்களும் எங்கேயும் செல்லக்கூடிய நிலை இல்லை. ஜனவரி 8 ஆம் திகதி கிடைத்த சுதந்திரத்தை தற்போது முறையற்ற விதத்தில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதில் சூழ்ச்சியொன்று காணப்படுகின்றது என்பதை நாம் தொடர்ந்தும் கூறிவருகின்றோம். வீதிகளில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கும் உதய கம்பன்பில, மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் நாடகங்களுக்கும் இந்த அரசாங்கமே பொறுப்புக்கூறவேண்டும்.[/quote]

என தெரிவித்தார்.

மேலும், ஊழல் விவகாரங்கள் தொடர்பில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

[quote]திருட்டுக்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வதாகக் கூறியிருந்தனர். தற்போது என்ன நடக்கிறது? கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், யாரை கைது செய்துள்ளனர்? திருட்டுக்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து துபாய், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள பணத்தை நாட்டிற்குக் கொண்டுவந்து, வெளிநாடுகளில் உள்ள வீடுகள் அனைத்தையும் விற்பனை செய்தால் வரியை நீக்க முடியும் என கூறியவர்கள் தற்போது எங்கு உள்ளனர்? 147,000 ரூபா வாகனத்தைப் பயன்படுத்தியவர்கள் ஒவ்வொரு நாளும் சிறைக்குச் செல்கின்றனர். எனினும், பாரியளவிலான கொள்ளையில் ஈடுபட்டவர்களை அரசாங்கம் மூடி மறைக்கின்றது. இந்த அரசாங்கத்திற்கும் ராஜபக்ஸ குடும்பத்திற்கும் உள்ள கொடுக்கல் வாங்கல் என்ன?[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்