அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கிரிப்பினால் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2016 | 12:33 pm

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கிரிப்பு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிளிலும் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

வரவு செலவுத் திட்டத்தை கண்டிக்கும் வகையில் இன்று காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணிவரை இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் சிறுவர், மகளிர் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகளிலும் மேலும் அவசர சிகிச்சை பிரிவுகளிலும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட மாட்டாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

மேலும் பதுளை வைத்தியசாலைக்கு வந்த நோயளர்கள் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்