அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2016 | 7:05 am

இன்று (30) காலை 8 மணி முதல் நாளை (01) காலை 8 மணி வரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தை கண்டிக்கும் வகையில் இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக சங்கதின் இணைப்பாளர் டொக்டர் நலிந்த ஹேரத் கூறியுள்ளார்.

ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படவுள்ளமை, அரச ஊழியர்கள் மேலதிகமாக செய்யும் தொழில்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை, இலவச மருத்துவ சேவைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தனியார் துறையினரிடம் வைத்தியசாலைகள் கையளிக்கப்படவுள்ளமை போன்ற விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுகின்ற காலப் பகுதியில் எந்தவொரு நோயாளரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பை எதிர்கொள்வதற்கு தயார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதற்கு முன்னதாக வைத்திய அதிகாரிகள் தன்னுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்