கடும் பனிப்பொழிவினால் அமெரிக்காவின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடும் பனிப்பொழிவினால் அமெரிக்காவின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடும் பனிப்பொழிவினால் அமெரிக்காவின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2016 | 12:12 pm

அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் நிலவி வருகின்றது.

புயல் காற்றுடன் கூடிய கடும் பனிப்பொழிவினால் டகோடா பிராந்தியங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று வீசிய பனிப்புயலினால் டகோடாவில் வீதிகள் மற்றும் குடியிருப்புக்கள் பனியால் மூடப்பட்டுள்ளள.

எனினும் நவம்பர் மாத முடிவில் வடக்கு மற்றும் தெற்கு டாகோடாவில் புயல் ஓய்ந்து சற்று வெப்பமான மிதமான காலநிலை நிலவுமெனவும், இரு மாநிலங்களினதும் மேல் மத்திய மேற்கு பகுதிகளில் ஓரளவு பனிப்பொழிவு காணப்படுமெனவும் அமெரிக்க வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிழக்கு டாகோடா மற்றும் மேற்கு மின்னேசோட்டாவை புயல் தாக்கியது.

இது நேற்று வீசிய புயலைக் காட்டிலும் வலு குறைவானது என தெரவிக்கப்படுகின்றது.

இது வரையில் போக்குவரத்து தொடர்பில் எவ்வித அறிவுறுத்தல்களும் விடுக்கப்படவில்லையென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்