ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் 35 ஆவது வருட பூர்த்தி  ஜனாதிபதி தலைமையில்

ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் 35 ஆவது வருட பூர்த்தி  ஜனாதிபதி தலைமையில்

ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் 35 ஆவது வருட பூர்த்தி  ஜனாதிபதி தலைமையில்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2016 | 7:20 pm

ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் 35 ஆவது வருட பூர்த்தி நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பில் நடைபெற்றது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் சிறந்த பிரதிநிதிகள் 11 பேர் ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் 35 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.

முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் வழிகாட்டலின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட ஊழியர் நம்பிக்கை நிதியம் 1981 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதியிலிருந்து செயற்பட்டு வருகிறது.

சிறுநீரகம், மற்றும் இருதி அறுவைச் சிகிச்சை, சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்கு இரண்டு நோயாளர்களுக்கு இதன்போது நிதியுதவியும் வழங்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்