வடக்கு மக்களின் காணி உரிமை என்பது தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் முதல் காரணி: சுனில் ஹந்துன்நெத்தி

வடக்கு மக்களின் காணி உரிமை என்பது தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் முதல் காரணி: சுனில் ஹந்துன்நெத்தி

எழுத்தாளர் Bella Dalima

25 Nov, 2016 | 9:19 pm

வடக்கு மக்களின் காணி உரிமை என்பது தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் முதல் காரணியாக அமைந்துள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாழ்வதற்கான காணி உரிமையே, வடக்கு மக்கள் அரசியல் உரிமையாகக் கோரும் முதலாவது விடயமெனத் தான் கருதுவதாக சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.

காணி உரிமை என்பது அடிப்படை உரிமை என குறிப்பிட்ட அவர், அந்தக் காணிகள் வடக்கு மக்கள் வாழ்ந்து பயிர்செய்கை மேற்கொண்ட காணிகள் எனவும் சுட்டிக்காட்டினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்