English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
25 Nov, 2016 | 3:24 pm
முறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் கோப் குழு முன்னிலையில் வழங்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்வதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த சாட்சியங்கள் அடங்கிய கோப்புக்கள் தற்போது சபாநாயகரிடம் உள்ளதாக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்தார்.
அவற்றைப் பரிசீலிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த கொடுக்கல் வாங்கலில் விநியோகிக்கப்பட்ட முறிகளில் காணப்படும் சட்டரீதியான தன்மை குறித்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் கூறினார்.
ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் காரியாலயத்தினூடாக வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய, குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கோப் அறிக்கை தொடர்பில் காணப்படக்கூடிய 25 இணைப்புக்களைக் கோரி, சபாநாயகருக்கு சட்ட மா அதிபரினால் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சிவில் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் 06 பேர் அடங்கிய குழுவினால் கோப் அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.
26 Sep, 2019 | 08:48 PM
04 Sep, 2019 | 07:09 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS