பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் இவ்வாண்டில் மாத்திரம் 1700 க்கும் அதிகமான முறைப்பாடுகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் இவ்வாண்டில் மாத்திரம் 1700 க்கும் அதிகமான முறைப்பாடுகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் இவ்வாண்டில் மாத்திரம் 1700 க்கும் அதிகமான முறைப்பாடுகள்

எழுத்தாளர் Bella Dalima

25 Nov, 2016 | 3:11 pm

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் இந்த வருடத்தில் மாத்திரம் 1700 க்கும் அதிகமான முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக பெண்களுக்கான தேசிய குழு தெரிவித்தது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பொலிஸ், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கும் முறைப்பாடுகள் கிடைப்பதாக பெண்களுக்கான தேசிய குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அநுலா இந்திராணி தெரிவித்தார்.

வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக பல பிரிவுகளூடாகவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதனடிப்படையில், பிரதேச செயலக மட்டங்களிலும் வேலைத்தளங்களை மையமாகக் கொண்டும் தோட்டப்புற பிரதேசங்களிலும் தெளிவூட்டல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அநுலா இந்திராணி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் சர்வதேச தினம் இன்றாகும்.

ஐக்கிய நாடுகள் சபை 1999 நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இந்த தினத்தை சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தியதோடு, அதற்கான பட்டயத்தில் 1996 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

1960 ஆம் ஆண்டு டொமினிக் குடியரசில் அரசியற்காரணங்களுக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் கொலை செய்யப்பட்டதை மையமாக வைத்து இந்த தினத்துக்கான பின்புலம் உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்