நூரி தோட்ட முகாமையாளர் கொலை: 18 பேருக்கு மரண தண்டனை

நூரி தோட்ட முகாமையாளர் கொலை: 18 பேருக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

25 Nov, 2016 | 3:38 pm

நூரி தோட்ட முகாமையாளர் கொலை தொடர்பில் 18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

மூன்று வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரனையின் பின்னர், அவிசாவளை மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா அபேரத்னவினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 05 ஆம் திகதி இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

இந்த கொலை தொடர்பில் தெரணியகல பிரதேச சபையின் தலைவர் அணில் ஷம்பிக்க விஜயசிங்க உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இவர்களில் 18 பேருக்கு எதிரான குற்றச்சாட்டு எவ்வித சந்தேகங்களும் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நீதிபதி, அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்