தெருக்களுக்கு Emoji, Meme போன்ற சமூக வலைத்தள வார்த்தைகளின் பெயர்கள்: ஒப்புதலுக்காக காத்திருக்கும் பின்லாந்து

தெருக்களுக்கு Emoji, Meme போன்ற சமூக வலைத்தள வார்த்தைகளின் பெயர்கள்: ஒப்புதலுக்காக காத்திருக்கும் பின்லாந்து

தெருக்களுக்கு Emoji, Meme போன்ற சமூக வலைத்தள வார்த்தைகளின் பெயர்கள்: ஒப்புதலுக்காக காத்திருக்கும் பின்லாந்து

எழுத்தாளர் Bella Dalima

25 Nov, 2016 | 5:22 pm

Emoji, Meme போன்ற சமூக வலைத்தளங்களில் பாவிக்கப்படும் வார்த்தைகளை தெருக்களின் பெயர்களாக வைக்க பின்லாந்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தெற்கு பின்லாந்தில் உள்ள ஒரு நகரத்தில் இரண்டு புதிய சாலைகளுக்கு Emoji Street மற்றும் Meme Street எனப் பெயரிடலாமா என்று விவாதம் நடைபெற்று வருகிறது.

பின்லாந்தில், மேற்கு ஹெல்சிங்கி நகரத்திற்கு அருகில் உள்ள லோஹ்யா என்ற பகுதியில் ஒரு புதிய வர்த்தக மண்டலத்தை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக Emojikatu மற்றும் Meemikatu என்ற பின்னிஷ் மொழியில் உள்ள பெயர்களை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு நகரத் திட்டமிடல் குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது.

தற்போது, உள்ளூர் மக்களிடம் அவர்களின் கருத்துக்களை நகர கவுன்சில் கேட்டுள்ளது.

எதிர்காலத் தலைமுறையினர் 21 ஆம் நூற்றாண்டைப் பற்றிய உணர்வைப் பெற, தெருக்களுக்கு நவீன பெயர்களை சூட்ட வேண்டும் என நகரத் திட்டமிடல் குழு விரும்புகிறது என கட்டிடக்கலை நிபுணர் மற்றும் நகரத் திட்டமிடல் குழுவைச் சேர்ந்த யுஹா ஆன்டிலா கூறியுள்ளார்.

எங்களது பகுதியில் உள்ள செடி, மரம் மற்றும் பறவைகளின் பெயர்கள் என எல்லாப் பெயர்களையும் சூட்டியாகிவிட்டது. நவீன காலத்தைப் பற்றி பேசும்பொருளான ஒன்றின் பெயரை வைக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,” என அவர் எம்.டி.வி. செய்தி இணையத்தளத்திடம் கூறியுள்ளார்.

உள்ளூர் மக்கள் லோஹ்யா திட்டத்தை எதிர்க்காவிட்டால், புதுவருட பிறப்பின் போது அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். ஆனால், சில பின்லாந்துவாசிகள் ட்விட்டர் தளத்தில், பாரம்பரியம் அல்லாத பெயர்களை வைப்பது சரியானதா என்று விவாதித்து வருகின்றனர்.

 

 

 

Source: BBC


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்