தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் தாக்குதல்: 2 ஆவது சாட்சியம் பதிவு

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் தாக்குதல்: 2 ஆவது சாட்சியம் பதிவு

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் தாக்குதல்: 2 ஆவது சாட்சியம் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

25 Nov, 2016 | 8:44 pm

யாழ். தீவகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக, இரண்டாவது சாட்சியம் இன்று பதிவு செய்யப்பட்டது.

2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தீவகப் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் நாரந்தனை எனுமிடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாழ். தீவகப் பகுதியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பாரளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அப்போதைய மெய்ப்பாதுகாவலராக இருந்த தர்மரட்ணம் தமிழ்வேந்தன் இன்று தனது சாட்சியத்தைப் பதிவுசெய்தார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில்18 ஆவது சாட்சியாளரான வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் நேற்று முதலாவதாக சாட்சியம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 20 பேர் வரையில் காயமடைந்தனர்.

நான்கு குற்றவாளிகள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத 50 சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

47 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் 40 சாட்சியங்கள் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, பின்னர் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்