சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றுவோருக்கான அடையாள அட்டை விநியோகம் இறுதிக் கட்டத்தில்

சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றுவோருக்கான அடையாள அட்டை விநியோகம் இறுதிக் கட்டத்தில்

சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றுவோருக்கான அடையாள அட்டை விநியோகம் இறுதிக் கட்டத்தில்

எழுத்தாளர் Bella Dalima

25 Nov, 2016 | 3:31 pm

இந்த வருடம் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த மாணவர்களுக்கான 80,000 அடையாள அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்தது.

இதுவரை இரண்டு இலட்சத்து 93 ஆயிரத்து 798 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் இரண்டு இலட்சத்து 82 ஆயிரத்து 926 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத்குமார குறிப்பிட்டார்.

எனினும், கிடைத்துள்ள விண்ணப்பங்களில் 2,123 விண்ணப்பங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத குறைபாடுகளுடன் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக மாணவர்களின் நலன்கருதி எதிர்வரும் சனிக்கிழமை அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதனைத் தவிர, அலுவலக நாட்களில் விசேட கருமபீடத்தினூடாக மாணவர்களுக்கான அடையாள அட்டையை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத்குமார சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்