கடற்கரைப் பகுதியை சொந்தம் கொண்டாடும் தனியார்: பொலிகண்டியில் மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

கடற்கரைப் பகுதியை சொந்தம் கொண்டாடும் தனியார்: பொலிகண்டியில் மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

25 Nov, 2016 | 8:17 pm

யாழ். பொலிகண்டியில் படகுகளை நிறுத்தி வைக்கக்கூடிய இறங்குதுறை பகுதியில் தனியார் ஒருவர் அத்துமீறி வசிப்பதாகத் தெரிவித்து மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வல்வெட்டித்துறை, பொலிகண்டி பகுதியில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலிகண்டி கடற்தொழிலாளர் சங்கக் கட்டிடத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியினைத் தனியார் ஒருவர் தமக்கு சொந்தம் என தெரிவித்து வேறு ஒரு நபருக்கு விற்றுள்ளார்.

குறித்த நபர் அந்தப் பகுதியை முட்கம்பி வேலியால் அடைத்துள்ளார்.

இதனால் படகுகளைக் கரைக்குக் கொண்டுவர முடியாமலும் வலைகளை உலர்த்த முடியாமலும் சிரமப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

மீனவர்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக வடமாகாண சபை உறுப்பினர் வாக்குறுதியளித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்