மாளிகைக்காடு சந்தியில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மாளிகைக்காடு சந்தியில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மாளிகைக்காடு சந்தியில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2016 | 1:16 pm

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு சந்தியில் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 9.15 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த வேளையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

52 வயதுடைய ஒருவரே சுமார் ஒரு கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்