போடைஸ் பகுதியிலுள்ள பாலத்தை புனரமைத்துத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

போடைஸ் பகுதியிலுள்ள பாலத்தை புனரமைத்துத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

24 Nov, 2016 | 9:46 pm

ஹட்டனில் இருந்து டயகமவிற்கு செல்லும் பிரதான வீதியின், போடைஸ் பகுதியிலுள்ள பாலம் சில நாட்களுக்கு முன்னர் சேதமடைந்துள்ளது.

இந்த பாலத்தை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

தனியார் பஸ் ஊழியர்கள், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்