பிரேசிலில் இருந்து வந்த சீனி கொள்கலனில் கொக்கேன் போதைப்பொருள்

பிரேசிலில் இருந்து வந்த சீனி கொள்கலனில் கொக்கேன் போதைப்பொருள்

பிரேசிலில் இருந்து வந்த சீனி கொள்கலனில் கொக்கேன் போதைப்பொருள்

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2016 | 12:38 pm

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலனிலிருந்து கொக்கேன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒருகொடவத்த சுங்க சாவடியில் குறித்த கொள்கலன் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவ தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த கொக்கேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள கொக்கேனின் அளவு மற்றும் பெறுமதி இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை

சில நாட்களுக்கு முன்பிருந்து பிரேசிலிலிருந்து கொண்டுவரப்படும் அனைத்து சீனி கொள்கலன்களையும் சோதனைக்குட்படுத்தப்படுவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்