நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் திருத்தப் பணிகளுக்காக சீன தொழில்நுட்பக் குழு நாளை இலங்கை வருகை

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் திருத்தப் பணிகளுக்காக சீன தொழில்நுட்பக் குழு நாளை இலங்கை வருகை

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் திருத்தப் பணிகளுக்காக சீன தொழில்நுட்பக் குழு நாளை இலங்கை வருகை

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2016 | 1:27 pm

நுரைச்சோலை லக்விஜய அனல்மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்க இயந்திரத்தின் திருத்தப் பணிகளுக்கு சீன தொழில்நுட்பக் குழுவொன்று நாட்டிற்கு நாளை வருகை தரவுள்ளது.

மின்பிறப்பாக்க கட்டமைப்பின் திருத்தப் பணிகளுக்கு 6 கிழமைகள் தேவைப்படும் என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செயலிழந்த குறித்த மின்பிறப்பாக்கியை மீள செயற்படுத்த முடியாது போனது.

செயலிழந்த மின்பிறப்பாக்கியை சோதனையிட்ட சீனக் குழுவினர் அந்நாட்டு பொறியியலாளர்களை வரவழைத்து திருத்தப பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.

அதற்கமைய குறித்த மின்பிறப்பாக்கியை வடிவமைத்த சீன நிறுவனத்தின் தொழிநுட்ப அதிகாரிகளும் பொறியியலாளர்களும் நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்