கொழும்பில் சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு இன்னும் 2 வருடங்கள் செல்லும்

கொழும்பில் சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு இன்னும் 2 வருடங்கள் செல்லும்

கொழும்பில் சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு இன்னும் 2 வருடங்கள் செல்லும்

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2016 | 10:18 am

அதிக மழை காரணமாக கொழும்பு நகரின் சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு இன்னும் 2 வருடங்கள் செல்லும் என கொழும்பு மாநகரசபை ஆணையார் வி.கே.அநுர தெரிவித்தார்.

கடந்த சில தினங்களில் பெய்த கடும் மழைக் காரணமாக கொழும்பு நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியதுடன் இதன் போது அதிக வாகன நெரிசலும் ஏற்றபட்டது.

இதனை தடுப்பதற்கு தற்போது பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை ஆணையார் வி.கே.அநுர குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவிடம் கேட்ட போது மழையை தொடர்ந்து வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு முறையான கான் வசதி இன்மையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்