ஒருகொடவத்தயில் சீனி இறக்குமதி செய்த கொள்கலனிலிருந்து 220 கிலோகிராம் கொக்கேன் கைப்பற்றல்

ஒருகொடவத்தயில் சீனி இறக்குமதி செய்த கொள்கலனிலிருந்து 220 கிலோகிராம் கொக்கேன் கைப்பற்றல்

எழுத்தாளர் Bella Dalima

24 Nov, 2016 | 8:48 pm

ஒருகொடவத்த சுங்கப்பிரிவில் சீனி இறக்குமதி செய்த கொள்கலன் ஒன்றிலிருந்து இன்று மீண்டும் 200 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

பிரேசிலிலிருந்து போர்த்துக்கல் ஊடாக ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த சீனி ஏற்றிய இந்த கொள்கலனிலிருந்து 8 பைகளில் 200 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை சுங்கம் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பிரிவு என்பன இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்