ஐ.நா. விற்கான அமெரிக்கத் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தெரிவு

ஐ.நா. விற்கான அமெரிக்கத் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தெரிவு

ஐ.நா. விற்கான அமெரிக்கத் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

24 Nov, 2016 | 5:28 pm

ஐக்கிய நாடுகள் சபைக்கான அடுத்த அமெரிக்கத் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தெற்கு கரோலினா மாகாண பெண் ஆளுநர் நிக்கி ஹேலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நிக்கி ஹேலியை ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிக்கி ஹேலிதான் ட்ரம்ப் அரசின் முக்கியப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை அந்தஸ்துக் கொண்ட பதவியில் பெண் ஒருவரை நியமிக்கும்போது, ட்ரம்ப் அரசின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் அந்த நியமனம் இருக்க வேண்டும் என்ற ஆட்சி மாற்றக் குழுவின் ஆலோசனைப்படி, ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார் என CNN செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிக்கி ஹேலி, தேர்தலின்போதுதான் ட்ரம்புக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்